/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 28, 2011 11:16 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஆனந்தன், தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு நிக்கோலஸ், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் குமார், விவசாய சங்க செயலர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். பட்டியலின மக்களின் துணைத் திட்டத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள 5007 கோடி ரூபாய் நிதியை முறையாக எஸ்.சி.,- எஸ்.டி., மக்களுக்கு சென்றடைய செய்ய வேண் டும். மாநில, மாவட்ட அள வில் கண்காணிப்பு குழுக்களை அமைத்திட வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங் குடி மாணவர்களின் உயர் கல்விக்கு துணைத் திட்ட நிதியை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.