வெங்கடாஜலபதி கோவிலில்இஸ்ரோ தலைவர் தரிசனம்
வெங்கடாஜலபதி கோவிலில்இஸ்ரோ தலைவர் தரிசனம்
வெங்கடாஜலபதி கோவிலில்இஸ்ரோ தலைவர் தரிசனம்
ADDED : ஜூலை 15, 2011 04:23 AM
திருமலை:இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி-17., ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதற்கான 53 மணி நேர கவுன்டவுன் நேற்று முன்தினம் துவங்கியது. ராக்கெட் ஏவுவது வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் 12 பேர் அடங்கிய விஞ்ஞானி குழுவினர், நேற்று அதிகாலை 4:48 மணிக்கு திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.இந்த வழிபாட்டின்போது, இன்று விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி., சி-17 ராக்கெட்டின் மாதிரி வடிவம் ஒன்று வெங்கடாஜலபதியின் பாதங்களில் வைத்து, பூஜிக்கப்பட்டது. பின்னர் காளஹஸ்திக்கு சென்ற விஞ்ஞானிகள், வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் வழிபாடு நடத்தினர். இதன்பின், ராதாகிருஷ்ணன் தலைமையிலான விஞ்ஞானி குழுவினர், ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டுச் சென்றனர்.