பி.எஸ்.என்.எல்., அதிகாரியாக நடித்த மோசடிப் பெண் கைது
பி.எஸ்.என்.எல்., அதிகாரியாக நடித்த மோசடிப் பெண் கைது
பி.எஸ்.என்.எல்., அதிகாரியாக நடித்த மோசடிப் பெண் கைது
ADDED : செப் 24, 2011 12:03 AM
சென்னை: பி.எஸ்.என்.எல்., அதிகாரி என கூறி, பி.போன் ஆக்டிவேஷனுக்கு, ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த பெண், கைது செய்யப்பட்டார்.
சென்னை, நுங்கம்பாக்கம், பி.எஸ்.என்.எல்., அலுவலக பொதுமேலாளர் பாலாஜி பிரசாத். இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், சோமி என்ற பெண், தன்னை பி.எஸ்.என்.எல்., அதிகாரி என்று கூறிக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் பி.போனுக்கு ஆக்டிவேஷன் கட்டணம் என்று கூறி, 2,250 ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதியப்பட்டு, இணை கமிஷனர் பொன்மாணிக்கவேல் மேற்பார்வையில், உதவிகமிஷனர் வேதரத்தினம் தலைமையில், எஸ்.ஐ.,க்கள் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த ரீனா (எ) சோமியை நேற்று முன்தினம், அம்பத்தூர் ஓ.டி., பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்து அவரிடம் இருந்து நான்கு காலர் ஐ.டி., போன்கள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் பணத்தை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சோமியை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.