குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த 12 மணி நேரத்தில்மாமூல் வாழ்க்கைக்கு திரும்பிய மும்பைவாசிகள்
குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த 12 மணி நேரத்தில்மாமூல் வாழ்க்கைக்கு திரும்பிய மும்பைவாசிகள்
குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த 12 மணி நேரத்தில்மாமூல் வாழ்க்கைக்கு திரும்பிய மும்பைவாசிகள்
ADDED : ஜூலை 15, 2011 12:50 AM
மும்பை:நேற்று முன்தினம், அடுத்தடுத்து நடந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருந்து, மும்பை மக்கள், நேற்று மீண்டனர்.
பள்ளிக்கு செல்வது, அலுவலகங்களுக்கு செல்வது என, தங்கள் வழக்கமான பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.மும்பையில் நேற்று முன்தினம் மாலை, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மூன்று இடங்களில், அடுத்தடுத்து, குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில், 21 பேர் கொல்லப்பட்டனர்; 140 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்புகள் நடந்த அடுத்த சில நிமிடங்களில், மும்பை முழுவதும் பதட்டம் தொற்றிக் கொண்டது.பொதுமக்கள் பீதி அடைந்தனர். தங்கள் பணிகளை பாதியிலேயே முடித்துக் கொண்டு, தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இரவு முழுவதும் பதட்டமும், பீதியும் நிலவியது. இருந்தாலும், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் இருந்து, 12 மணி நேரத்துக்குள், மும்பை மக்கள் மீண்டனர். நேற்று காலையில் வழக்கம்போல் தங்கள் அலுவல்களை கவனிக்கத் துவங்கினர்.பெரும்பாலான பள்ளிகள், நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள் எப்போதும் போல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றனர். அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கின. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். ரயில், பஸ்களில் வழக்கம்போல் கூட்டம் நிரம்பி வழிந்தது.தெற்கு மும்பையைச் சேர்ந்த ஜாசன் பெரைரா கூறுகையில், ''நான் பயணம் செய்த ரயிலில், எப்போதும் போல் கூட்டம் இருந்தது. குண்டு வெடிப்பு பற்றிய பேச்சுக்கள் இருந்ததே தவிர, அதுபற்றிய பீதி, பெரும்பாலான பயணிகளிடம் இல்லை'' என்றார்.