ADDED : ஜூலை 19, 2011 12:43 AM
மஞ்சூர் : மஞ்சூர்-ஊட்டி பிரதான சாலையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் பாலம் கட்டும் பணியால் டிரைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சூர் அருகே காந்திகண்டி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த பாலத்தை அப்புறப்படுத்தி புதிய பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்து வருகிறது. இந்த பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது. சாலையின் ஒருபுறத்தில் பெரிய அளவில் தோண்டப்பட்டு அங்கிருந்த மண்ணை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினர். பணிகள் துவங்கிய நாளிலிருந்து வேகம் குறைவாக உள்ளது. தற்போது தோண்டிய இடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால், டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, பாலபணியை விரைவு படுத்த வேண்டும்.