/உள்ளூர் செய்திகள்/தேனி/நகராட்சியில் ஓட்டு எண்ணுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : கலெக்டர் ஆலோசனைநகராட்சியில் ஓட்டு எண்ணுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : கலெக்டர் ஆலோசனை
நகராட்சியில் ஓட்டு எண்ணுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : கலெக்டர் ஆலோசனை
நகராட்சியில் ஓட்டு எண்ணுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : கலெக்டர் ஆலோசனை
நகராட்சியில் ஓட்டு எண்ணுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : கலெக்டர் ஆலோசனை
ADDED : அக் 02, 2011 11:56 PM
கம்பம் : கம்பம் நகராட்சியில் ஓட்டு எண்ணுவதை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் பழனிச்சாமி ஆலோசனை வழங்கினார்.
கம்பத்தில் ஓட்டு எண்ணும் மையங்களை கலெக்டர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டார். நகராட்சி அலுவலகத்தில் ஓட்டு எண்ணும் பழைய கவுன்சில் ஹாலை பார்த்தார். அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு சுகாதாரம், வரி மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பிரிவுகள் செயல்படுவது தெரிந்தது. இந்த தடுப்புகளை அகற்ற ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறிய கலெக்டர், ஓட்டு எண்ணுவதற்கு வேறு பள்ளிக்கூடங்கள் இல்லையா என்றார்.
பதிலளித்த நகராட்சி அதிகாரிகள்,' அலுமினிய பிட்டிங்ஸ் தான் தடுப்புகளாக அமைத்துள்ளோம். அவற்றை அப்படியே எடுத்து விட்டு, பின் மீண்டும் மாட்டி விடுவோம் என்றனர்.
செலவு எவ்வளவு ஆகும் என்று கேட்டதற்கு,பதிலளித்த அதிகாரிகள்,'ரூ. 35 ஆயிரம் வரை ஆகும்,' என்றனர். நீங்கள் ரூ. 35 ஆயிரம் என்றால், ரூ. 50 ஆயிரம் ஆகி விடும். இந்த செலவு தேவை தானா என்பதை எண்ணிப்பாருங்கள். சிக்கனமாக இருக்க வேறு இடத்தை பரிசீலனை செய்யுங்கள் என்றார்.


