/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி பட்ஜெட்: 24ம் தேதி தாக்கல்புதுச்சேரி பட்ஜெட்: 24ம் தேதி தாக்கல்
புதுச்சேரி பட்ஜெட்: 24ம் தேதி தாக்கல்
புதுச்சேரி பட்ஜெட்: 24ம் தேதி தாக்கல்
புதுச்சேரி பட்ஜெட்: 24ம் தேதி தாக்கல்
ADDED : ஆக 19, 2011 02:45 AM
புதுச்சேரி:புதுச்சேரி பட்ஜெட், வரும் 24ம் தேதி, சட்டசபையில் தாக்கல்
செய்யப்படுகிறது.புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கவர்னர்
உரையுடன் நேற்று துவங்கியது. கவர்னர் இக்பால்சிங் உரையாற்றினார். அவரது
உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் சபாபதி வாசித்தார். பின், சபையில் இருந்து
கவர்னர் விடைபெற்று சென்றார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தை முதல்வரின் பார்லிமென்ட் செயலாளர் வைத்தியநாதன்
முன்மொழிந்தார். அரசு கொறடா நேரு வழிமொழிந்தார்.இதைதொடர்ந்து, சபையை ஒத்தி
வைப்பதாக அறிவித்த சபாநாயகர், வரும் 24ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு சபை
மீண்டும் கூடும் என்று அறிவித்தார்.
நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 24ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய் கிறார்.


