ADDED : செப் 13, 2011 02:01 AM
ப.வேலூர்: ப.வேலூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி, தேங்காய் லோடு லாரியின்
மேற்புறத்தில் சிக்கியதில், இரு மின்கம்பம் உடைந்தது.
அதனால், அப்பகுதி
முழுவதும் இருளில் மூழ்கியது. ப.வேலூர், செந்தில் என்பவரது தேங்காய்
குடோனில் இருந்து, நேற்று இரவு 7 மணியளவில், தேங்காய் ஏற்றிய லாரி ஒன்று,
மோகனூர் வழியாக மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தது. இரவு 7.30
மணியளவில், பொய்யேரி என்ற இடத்தில் சென்றபோது, உயர் மின்னழுத்த கம்பி,
லாரியின் மேற்புறத்தில் சிக்கியது. அதை பார்க்காத டிரைவர், லாரியை வேகமாக
ஓட்டிச் சென்றுள்ளார். அதனால், கம்பி மற்றும் இரு மின் கம்பங்கள் உடைந்தது.
இந்த விபத்தால், பொய்யேறி சுற்றுவட்டாரம முழுவதும் இருளில்
மூழ்கியது.விபத்து குறித்து ப.வேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.