/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஐந்து பேரூராட்சி தலைவர்பதவி பெண்களுக்கு ஒதுக்கீடுஐந்து பேரூராட்சி தலைவர்பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
ஐந்து பேரூராட்சி தலைவர்பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
ஐந்து பேரூராட்சி தலைவர்பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
ஐந்து பேரூராட்சி தலைவர்பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
ADDED : செப் 25, 2011 01:43 AM
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 5 பேரூராட்சி தலைவர் பதவி
பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டத்தில்
சின்னசேலம், வடக்கனந்தல், தியாகதுருகம், சங்கராபுரம், திருக்கோவிலூர்,
உளுந்தூர்பேட்டை, வள வனூர், விக்கிர வாண்டி, செஞ்சி, கோட்டக்குப்பம்,
மரக்காணம், மணலூர் பேட்டை, திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர் மற்றும்
அனந்தபுரம் பேரூராட்சிகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 5 தலைவர் பதவியும்,
எஸ். சி.,க்கு 3 பதவியும் மற்றும் பொதுவாக 7 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்
பட்டுள்ளது.15 பேரூராட்சிகளிலும் மொத்தம் 243 வார்டு கவுன்சிலர் பதவிகள்
உள்ளன. இதில் எஸ்.சி., பொதுவிற்கு 27 இடங்களும், எஸ்.சி., பெண்களுக்கு 21
இடங்களும், பெண்களுக்கு 60 இடங்களும் மற்றும் 135 பொதுவாகவும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளன.
15 பேரூராட்சிகளில் 243 வார்டுகளிலும் 261 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்
பட்டுள் ளன. 15 பேரூராட்சியிலும் 88,078 ஆண் வாக்காளர்களும், 87,627 பெண்
வாக்காளர்கள் உட்பட 1,75,705 வாக்காளர்கள் உள்ளனர்.