/உள்ளூர் செய்திகள்/தேனி/பாதாள சாக்கடை பணிகளுடன் குடிநீர் குழாய் பணிகள் நடக்குமாபாதாள சாக்கடை பணிகளுடன் குடிநீர் குழாய் பணிகள் நடக்குமா
பாதாள சாக்கடை பணிகளுடன் குடிநீர் குழாய் பணிகள் நடக்குமா
பாதாள சாக்கடை பணிகளுடன் குடிநீர் குழாய் பணிகள் நடக்குமா
பாதாள சாக்கடை பணிகளுடன் குடிநீர் குழாய் பணிகள் நடக்குமா
ADDED : ஆக 25, 2011 11:51 PM
தேனி : பாதாள சாக்கடைக்கு ரோட்டை தோண்டும் போதே, புதிய குடிநீர் திட்டத்திற்கு பைப் லைன் பதிக்குமாறு மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி நகராட்சி முழுவதும் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. வைகை அணையில் இருந்து தேனிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கும் அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக தற்போதுள்ள பழைய குடிநீர் பைப் லைன்களை முழுமையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் பைப் லைன் மாற்றும் பணிகளையும் இப்போதே துவக்கி விட்டால், ஒரே நேரத்தில் இரண்டு பணிகளும் முடிந்து விடும். அதன் பின் ரோடு சீரமைத்தால் மீண்டும் தோண்ட வேண்டிய அவசியம் இருக்காது. எனவே இரு பணிகளையும் இணைத்து விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.