ADDED : ஆக 17, 2011 01:37 AM
கும்பகோணம்: தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் கிராம நிர்வாக குழுவின் மாவட்ட அளவிலான நரிக்குறவர் விழிப்புணர்வு கூட்டம் சுவாமிமலையில் நடந்தது.
கூட்டத்திற்கு விஜயசுந்தரம் தலைமை வகித்தார். காரை. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசங்கர், நம்பியார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் எஸ்.டி., பழங்குடியினர் உரிமை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது, சென்னையில் எஸ்.டி., உரிமைக்கான மாநில பொதுக்கூட்டத்தை நடத்துவது, நல வாரியத்தின் பயன் குறித்தும், பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்பது, அடிப்படை தேவைகளை பெறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது. கூட்டமைப்பின் கோரிக்கைகள் குறித்து ராதா பேசினார். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் மாத இறுதியில் சென்னை கோட்டை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசின் கவனத்தை பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.