/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கருப்பசாமி பாண்டியன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்புகருப்பசாமி பாண்டியன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
கருப்பசாமி பாண்டியன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
கருப்பசாமி பாண்டியன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
கருப்பசாமி பாண்டியன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
திருநெல்வேலி : பாளை பெருமாள்புரம் நிலஅபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி பாண்டியனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நெல்லை கோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையே நடுவக்குறிச்சி கொம்பையா அளித்த நில அபகரிப்பு வழக்கில் ஜேஎம்.1 கோர்ட்டில் கருப்பசாமி பாண்டியன், அவரது சகோதரர் கொம்பையா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுமீதான விசாரணையும் இன்று(20ம் தேதி) விசாரணைக்கு வருகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கருப்பசாமி பாண்டியனின் மகன் பரமசிவ ஐயப்பன் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுமீதான விசாரணையும் இன்று(20ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசும் போலீசும் காரணம் : முன்னதாக கருப்பசாமி பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக சிக்கன் குனியா காய்ச்சலால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக 11 மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்தேன். இந்நிலையில் தான் என் மீது தொடர்ந்து 3 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் என் குடும்பத்தினரையும் சேர்த்து வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் என்னை 3 நாட்கள் தனிமையில் அடைத்து வைத்தனர். இதனால் நானும், என் குடும்பத்தினரும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம். கோர்ட்டில் ஜாமீன் கிடைத்த பிறகு ஒரு மாதம் மருத்துவ சிகிச்சை எடுக்க உள்ளேன். இந்த காலகட்டத்தில் சிறையில் எனக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் தமிழக அரசும், போலீசாரும் தான் காரணம். கடந்த 2 நாட்களாக பாளை.மத்திய சிறையில் கரண்ட் இல்லை. இதனால் வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. நான் யாரையும் மிரட்டவில்லை. இவ்வாறு கருப்பசாமி பாண்டியன் கூறினார்.


