/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நகருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணிப்பு: பயணிகள் தவிப்புநகருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணிப்பு: பயணிகள் தவிப்பு
நகருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணிப்பு: பயணிகள் தவிப்பு
நகருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணிப்பு: பயணிகள் தவிப்பு
நகருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணிப்பு: பயணிகள் தவிப்பு
ADDED : ஆக 25, 2011 11:41 PM
காரியாபட்டி : இரவு நேரத்தில் பஸ்கள் நகருக்குள் வராமல் நான்கு வழிச்சாலையிலே செல்வதால் வெளியூர் சென்று வரும் பயணிகள் தவிக்கின்றனர்.
மதுரை-தூத்துக்குடி சாலையில் காரியாபட்டி அமைந்துள்ளது. சுற்றி உள்ள கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல காரியாபட்டிக்கு வருகின்றனர். இதற்கு காரணம், 24 மணி நேரமும் இந்த வழித்தடத்தில் பஸ் வசதி உள்ளது. கிராமங்களிலிருந்து இரு சக்கர வாகனங்களில் காரியாபட்டிக்கு வந்து, பின் வெளியூர்களுக்கு சென்று, இரவில் எந்த நேரத்திலும் வீட்டிற்கு சென்று வந்தனர். இந்த வசதி நான்கு வழிச்சாலை போடுவதற்கு முன் பயன்பாட்டில் இருந்தது. தற்போது நான்கு வழிச்சாலை ஏற்படுத்தியபின் இரவு 10 மணிக்கு மேல் மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடியிலிருந்து வரும் பஸ்கள் நகருக்குள் வந்து செல்வது கிடையாது. மதுரையில் ஏறினால் காரியாபட்டியில் நிற்காது என கூறி அருப்புக்கோட்டை பைபாசில் இறக்கிவிடுகின்றனர். அருப்புக்கோட்டையில் ஏறினால் காரியாபட்டியில் நிற்காது என ஏற்ற மறுக்கின்றனர். இதனால் செய்வதறியாது பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி, இரவு நேரத்தில் உரிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இரவு நேரத்தில் அனைத்து அரசு பஸ்களையும் காரியாபட்டி நகருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.