/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நிதி நிறுவனத்துக்கு பூட்டு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகைநிதி நிறுவனத்துக்கு பூட்டு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
நிதி நிறுவனத்துக்கு பூட்டு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
நிதி நிறுவனத்துக்கு பூட்டு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
நிதி நிறுவனத்துக்கு பூட்டு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஆக 25, 2011 11:18 PM
பழநி : முதலீட்டாளர்கள் தொந்தரவு செய்வதாக, நிதி நிறுவனம் நடத்திய மூவர் பழநி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர். பழநி தட்டான்குளம் நவீன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், மனைவி பூங்கொடி, உறவினர் கோபிநாத். 'டைகூன்ஸ் எம்பயர்' என்ற நிதி நிறுவன கிளை நிர்வாகிகளாக இருந்தனர். ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால், 36 மாதங்களுக்கு தலா 10 ஆயிரம்; 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், 36 மாதங்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என, அறிவித்தனர். சிலருக்கு, மூன்று மாதங்களுக்கு தொகை வழங்கப்பட்டது. பழநியில் மட்டும் ஒரு கோடி 40 லட்சம் ரூபாய் வசூலித்து, சில மாதங்களுக்கு முன் மாயமாகினர். கடந்த ஜூனில், மூவரையும் கேரள போலீசார் கைது செய்தனர். சிறைவாசம் முடிந்து, நேற்று முன்தினம் பழநிக்கு வந்தனர். இதை அறிந்த முதலீட்டாளர்கள், வீட்டிற்கு சென்று பணத்தை தர வற்புறுத்தினர். மூவரும் தப்பி, போலீசில் தஞ்சம் அடைந்தனர். பணத்தை பெற்றுத்தரும்படி முதலீட்டாளர்கள், ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்யும்படி, முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மூவரையும் விசாரணையின் போது ஆஜராக அறிவுறுத்தி போலீசார் விடுவித்தனர்.