Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/புதிதாக 106 கோவில்களில் அன்னதானத் திட்டம் அமல் : பட்ஜெட்டில் அறிவிப்பு

புதிதாக 106 கோவில்களில் அன்னதானத் திட்டம் அமல் : பட்ஜெட்டில் அறிவிப்பு

புதிதாக 106 கோவில்களில் அன்னதானத் திட்டம் அமல் : பட்ஜெட்டில் அறிவிப்பு

புதிதாக 106 கோவில்களில் அன்னதானத் திட்டம் அமல் : பட்ஜெட்டில் அறிவிப்பு

ADDED : ஆக 05, 2011 02:38 AM


Google News

* வருவாய்த் துறை, பதிவுத் துறை, நகராட்சி நிர்வாகம், உணவுப்பொருள் வழங்கல், போக்குவரத்துத் துறைகளில் மின் ஆளுகைத் திட்டம், முழுமையாகச் செயல்படுத்தப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், மாவட்ட மின் ஆளுகைத் திட்டம், விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* தமிழகத்தின் 2010-11ம் ஆண்டு, தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 40 ஆயிரம் கோடி ரூபாய்.

இரண்டாம் நிலை நகரங்களில் காலியாக உள்ள, தகவல் தொழில்நுட்பப் பூங்கா இடங்களை விற்பனை செய்ய, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். 'புதிய தகவல் பரிமாற்ற தொழில்நுட்பக் கொள்கை- 2011' உருவாக்கப்படும்.

* 12 ஆண்டுகளுக்கு மேல், கும்பாபிஷேகம் நடக்காமல் உள்ள, 1006 கோவில்களுக்கு புனரமைப்பு முடிக்கப் பெற்று, கும்பாபிஷேகம் செய்யப்படும். இந்த நிதியாண்டில், 89 கோவில்களைப் புனரமைக்க, 22.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* அன்னதானத் திட்டம், முழு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படும். மேலும், 106 கோவில்களுக்கு, இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். தினம் ஒரு கால பூஜையாவது மேற்கொள்ள, வட்டி வருமானம் கிடைக்கும் வகையில், 11 ஆயிரத்து 931 கோவில்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிரந்தர வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, தலா ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அர்ச்சகர்கள், ஓதுவார், இசைவாணர், கிராம பூஜாரிகளின் ஓய்வூதியம், 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

* திருக்குறள் மற்றும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், ஆங்கிலம், அரபு, சீன மொழிகளில் பெயர்த்து, இணையதளத்தில் வெளியிடுவதற்காக, தமிழ்ப் பல்கலைக்கு, 48.5 லட்சம் ரூபாயும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு பத்து லட்சம் ரூபாயும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

* 2012ம் ஆண்டு பொங்கலை ஒட்டி, 159.04 லட்சம் சேலையும், 158.19 லட்சம் வேட்டிகளும் வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 269 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us