வெளி நாட்டு பட்டாசுகளால் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
வெளி நாட்டு பட்டாசுகளால் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
வெளி நாட்டு பட்டாசுகளால் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
ADDED : ஆக 28, 2011 07:25 PM
விருதுநகர்:''சீனாவிலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யும் பட்டாசுகளால் சிவகாசி பகுதியில் உள்ள 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என மாணிக்கதாகூர் எம்.பி., தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில், சிவகாசி பகுதியில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. பட்டாசு தயாரிக்கும் தொழிலில் 2 லட்சம் தொழிலாளர்கள் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த வருமானத்தை நம்பியே இந்த தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இந் நிலையில் சீனாவிலிருந்து கட்டத்தல்காரர்களால் கப்பல் மூலம் பட்டாசுகளை கடத்தி இந்தியாவில் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மத்திய அரசு நடவடிக்கை எடுத்து துறைமுகங்களில் கடத்தல் பட்டாசுகளை தடை செய்ய வேண்டும். போலீசார் மூலமாக கடத்தல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்படும் 2 லட்சம் தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.