/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேங்காய்த்திட்டு முகத்துவாரம்ஆழப்படுத்தும் பணி துவக்கம்தேங்காய்த்திட்டு முகத்துவாரம்ஆழப்படுத்தும் பணி துவக்கம்
தேங்காய்த்திட்டு முகத்துவாரம்ஆழப்படுத்தும் பணி துவக்கம்
தேங்காய்த்திட்டு முகத்துவாரம்ஆழப்படுத்தும் பணி துவக்கம்
தேங்காய்த்திட்டு முகத்துவாரம்ஆழப்படுத்தும் பணி துவக்கம்
ADDED : செப் 16, 2011 03:21 AM
புதுச்சேரி:புதுச்சேரி தேங்காய்த்திட்டு முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி
நடந்து வருகிறது.புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் மணல் தூர்ந்து
உள்ளதால் மீனவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் படகுகள் மணலில்
சிக்கி பழுதாகி விடுகின்றன. இந்நிலையில் திட்ட அமலாக்க முகமை சார்பில் உலக
வங்கி நிதியுதவியுடன் மார்க் நிறுவனம் 8.9 கோடி மதிப்பீட்டில்
தேங்காய்த்திட்டு முகத்துவாரத்தில் ட்ரெஜ்ஜர் மூலம் மணல் அள்ளும்பணி
விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்பணி 8 மாதம் நடக்க உள்ளது. இதில் முகத்துவாரத்தில் 3 லட்சம் க்யூபிக்
மீட்டர் மணல் அள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்ரெஜ்ஜர் மூலம் மணல்
எடுத்து கரையில் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்
தேங்காய்த்திட்டு மீன்பிடித்துறைமுகத்தில் படகுகள் கட்டப்படும் சுவர் 200
மீட்டர் நீட்டிக்கப்பட உள்ளது.