"சேனல் 4' வீடியோ போலியானது : ஐ.நா., அமைப்பில் மன்றாடும் இலங்கை
"சேனல் 4' வீடியோ போலியானது : ஐ.நா., அமைப்பில் மன்றாடும் இலங்கை
"சேனல் 4' வீடியோ போலியானது : ஐ.நா., அமைப்பில் மன்றாடும் இலங்கை
நியூயார்க் : இலங்கை நாட்டு ராணுவத்தின் மனித உரிமை மீறல் தொடர்பான, 'சேனல் 4' வீடியோ குற்றச்சாட்டு குறித்து, ஐ.நா.,வின் சர்வதேச அரசியல் பொது மன்னிப்பு அமைப்பின் தலைவர் ஜோஸ் லூயிஸ் டியாஸ்சை சந்தித்து, இலங்கை பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர், 2009ம் ஆண்டின் இறுதியில் முடிவுக்கு வந்தது.
இது தொடர்பாக, ஐ.நா.,வின் சர்வதேச அரசியல் பொது மன்னிப்பு அமைப்பின் தலைவர் ஜோஸ் லூயிசை நியூயார்க்கில், ஐ.நா.,விற்கான இலங்கையின் நிரந்தர தூதர் பலிதா கோஹோனா மற்றும் துணைத் தூதர் ஷவேந்திர சில்வா சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சேனல் 4 வீடியோ போலியானது. இந்த வீடியோவில் தெளிவு இல்லை. மொழி மாற்றம் செய்யப்பட்டு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் இணையதளத்தில் இருந்து சில விஷயங்கள் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. இலங்கை ராணுவத்தின் மீதான இக்குற்றச்சாட்டை, 'சேனல் 4' 'டிவி'யால் நிரூபிக்க முடியாது.
'போர் முடிந்து, தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் கண்ணி வெடிகளை நீக்குவது, உள்கட்டமைப்பு ஏற்படுத்துவது, அப்பகுதியில் இருந்து வெளியேறியவர்களை அங்கு குடியமர்த்தி, உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதிகளை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இலங்கை அரசு உள்ளது.
'இது தொடர்பாக விசாரணை நடத்த, இலங்கை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மூலம் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. முழு விசாரணை மேற்கொள்ள அக்கமிட்டிக்கு போதிய அவகாசம் தேவை. நெருக்கடியின் கீழ் விசாரணை மேற்கொள்வது கடினம். டாக்குமென்ட்ரிகளில் இருந்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு, 'சேனல் 4' காட்டிய வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளன. உண்மையான வீடியோவில், கொடூரச் செயலை நிறைவேற்றுபவர்கள் தமிழ் மொழி பேசுகின்றனர்.
'இலங்கை அரசின் மீது நம்பகமற்ற தன்மையை உருவாக்கவே, 'சேனல் 4' வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் இலங்கையுடன் ஒளிவுமறைவு இல்லாத பேச்சுவார்த்தை நடத்த, சர்வதேச அரசியல் பொது மன்னிப்பு அமைப்பை வரவேற்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.