ADDED : அக் 07, 2011 12:47 AM
ஊட்டி : சாம்ராஜ் மேல்நிலை பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில்
கோக்கலாடா கிராமத்தில் நடந்து வரும் 7 நாள் சிறப்பு முகாம் நாளை
நிறைவடைகிறது. சாம்ராஜ் மேல்நிலை பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சிறப்பு
என்.எஸ்.எஸ்., முகாம் கோக்கலாடா கிராமத்தில் கடந்த 2ம் தேதி துவங்கியது.
முகாமில், பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல், சாலையோர முட்புதர்களை
நீக்குதல், நடைபாதைகளை சீரமைத்தல், கோவில் உழவாரப்பணி, மயான பாதை செல்லும்
சாலை சீரமைத்தல், நுகர்வோர் விழிப்புணர்வு உட்பட பல்வேறு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நாளை கோக்கலாடா உயர்நிலை பள்ளியில் நடக்கிறது.
நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரங்கநாதன், மாவட்ட கல்வி அலுவலர்(பொ)
ராஜி, பள்ளி செயலாளர், என்ரிக்சன், சாம்ராஜ் மேல்நிலை பள்ளி
தலைமையாசிரியர்(பொ) லதா, என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் இளமுருகன் உட்பட
பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர். உதவி முகாம் அலுவலர் முரளி நன்றி
கூறுகிறார்.


