/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரயில் பாதை அமையும் இடத்தில் ஆர்.டி.ஓ., தலைமையில் தணிக்கைரயில் பாதை அமையும் இடத்தில் ஆர்.டி.ஓ., தலைமையில் தணிக்கை
ரயில் பாதை அமையும் இடத்தில் ஆர்.டி.ஓ., தலைமையில் தணிக்கை
ரயில் பாதை அமையும் இடத்தில் ஆர்.டி.ஓ., தலைமையில் தணிக்கை
ரயில் பாதை அமையும் இடத்தில் ஆர்.டி.ஓ., தலைமையில் தணிக்கை
ADDED : செப் 06, 2011 10:38 PM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் - கள்ளக்குறிச்சி வரை ரயில் பாதை அமையவுள்ள நிலத்தை ஆர்.டி.ஓ., தலைமையிலான அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
சின்னசேலம்- கள்ளக்குறிச்சி இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக நீர்நிலை புறம்போக்கு மற்றும் பாட்டை நிலத்தினை ரயில்வே துறையினருக்கு மாற்றிக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று காலை வருவாய் துறை, ரயில்வே துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டுத் தணிக்கை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., உமாபதி தலைமையில் கள்ளக்குறிச்சி, தென்கீரனூர், ஏமப்பேர், தச்சூர், பொற்படாக்குறிச்சி, இந்திலி, வினைதீர்த்தாபுரம், கனியாமூர், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலை புறம்போக்கு மற்றும் பாட்டை இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கள்ளக்குறிச்சி தாசில்தார் வைகுண்டவரதன், தலைமை நில அலுவலர் ஜெயசந்திரன், ஆய்வாளர் செல்வராஜ், ரயில்வே துறை உதவி பொறியாளர் ராமலிங்கம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் நளினி, வி.ஏ.ஓ., ஜலால் உடனிருந்தனர்.