/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சம்பா நெல் சாகுபடி: "டிவி'யில் விளக்கம்சம்பா நெல் சாகுபடி: "டிவி'யில் விளக்கம்
சம்பா நெல் சாகுபடி: "டிவி'யில் விளக்கம்
சம்பா நெல் சாகுபடி: "டிவி'யில் விளக்கம்
சம்பா நெல் சாகுபடி: "டிவி'யில் விளக்கம்
ADDED : ஆக 30, 2011 11:30 PM
புதுச்சேரி : புதுச்சேரி தூர்தர்ஷனில்'சம்பா நெல் சாகுபடி' குறித்து நேயர்களின் சந்தேகங்களுக்கு இன்று (31ம் தேதி) விளக் கம் அளிக்கப்படுகிறது.
இது குறித்து நிலைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி தூர்தர்ஷ னில் இன்று (31ம் தேதி) மாலை 5.30 மணிக்கு சம்பா நெல் சாகுபடி முறையும் பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்'என்ற தலைப்பில் தொலைப் பாலம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியில், வரும் காலங்களில் சம்பா நெல் சாகுபடி குறித்தும், அதைப் பயிரிடும் முறைகள், எந்தப் பருவ காலங்களில் பயிரிடுவது, நடவு முறை, அதில் உண்டாகும் பூச்சி மற்றும் நோய்கள் குறித்த நேயர்களின் சந்தேகங்களுக்கு புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் டாக்டர் விஜயகுமார், உழவியல் வல்லுநர் டாக்டர் ரவி ஆகியோர் விளக்கம் அளிக்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் நேயர்கள் 0413-2275072, 2275073 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


