Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாணவர்கள் மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்

மாணவர்கள் மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்

மாணவர்கள் மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்

மாணவர்கள் மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்

ADDED : செப் 07, 2011 11:00 PM


Google News
குறிஞ்சிப்பாடி:''கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது'' என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளர் பேசினார்.வடலூர் அடுத்த கருங்குழி ஏரீஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் முதல் பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லூரி தாளாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பழனியப்பன் வரவேற்றார். ஏரீஸ் சேவை அறக்கட்டளை உறுப்பினர் சுரேகா முன்னிலை வகித்தார். ஏரீஸ் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ் போராசிரியர் செல்லபாலு, நிர்வாக அலுவலர் வேதமணி மற்றும் துறை தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகப் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்த்த மத்திய அரசு ஆண்டுக்கு 1,700 கோடி செலவு செய்கிறது.திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசு 15 சதவீதம் உயர்கல்வி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆனால் இப்பகுதியில் 6 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர் கல்வி பெருகின்றனர். தற்போது அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பு படித்து விட்டு அடுத்து பி.எட்., படிக்கப்போவதாகக் கூறி வருகின்றனர். இதற்கு பெற்றோர்கள் காரணமாக உள்ளனர்.

மற்றவர்கள் செய்வதை செய்யாமல் மாற்றி யோசித்து தனக்கே ஒரு பாதையில் சென்றால் வெற்றி நிச்சயம். இன்று ஆங்கிலம் தெரியாதவர்கள் ஆங்கில ஆசிரியர்களாக உள்ளனர்.இங்கு பட்டம் பெற்ற அனைவரும் வாய்ப்பு கிடைத்தால் உயர் கல்வி படிக்க வேண்டும். தற்போது பட்டப்படிப்புகள் அடிப்படை கல்வியாக மாறி விட்டது.

இவ்வாறு திருவள்ளுவர் பல்கலைக் கழகப் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us