/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாவட்ட சைக்கிள் போட்டியில் மாணவ, மாணவியர் "கலக்கல்'மாவட்ட சைக்கிள் போட்டியில் மாணவ, மாணவியர் "கலக்கல்'
மாவட்ட சைக்கிள் போட்டியில் மாணவ, மாணவியர் "கலக்கல்'
மாவட்ட சைக்கிள் போட்டியில் மாணவ, மாணவியர் "கலக்கல்'
மாவட்ட சைக்கிள் போட்டியில் மாணவ, மாணவியர் "கலக்கல்'
ADDED : செப் 18, 2011 09:35 PM
திருப்பூர் : அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில் சைக்கிள் போட்டி, திருப்பூரில்
நேற்று நடந்தது.போட்டியை, புனித ஜோசப் பள்ளி முன், மதிவாணன் துவக்கி
வைத்தார்.
வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடந்த அப்போட்டியில்,
திருப்பூர், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை
சேர்ந்த 350 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு
15 கிலோ மீட்டர்; மாணவியருக்கு 10 கிலோ மீட்டர். 15 வயதுக்கு உட்பட்ட
மாணவர்களுக்கு 20 கி.மீ.,; மாணவியருக்கு 15 கிலோ மீட்டர். 17 வயதுக்கு
உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவியருக்கு 15 கிலோ மீட்டர் தூரம்
வெற்றி இலக்கு நிர்ணயித்து போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றோர்
விவரம்: 13 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஊத்துக்குளி எம்.என்.சி.,
பள்ளி மாணவர் கவுதம் முதலிடம்; திருப்பூர் வித்யவிகாசினி பள்ளி மாணவர்
நீலேஸ்வரன் இரண்டாமிடம்; எம்.என்.சி., பள்ளி மாணவர் மனோஜ் மூன்றாமிடம். 15
வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் திருப்பூர் சின்னசாமி அம்மாள் அரசு
மேல்நிலைப்பள்ளி மாணவன் நந்தகுமார் முதலிடம்; செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன்
பள்ளி மாணவன் ஜீவா, விஜயாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் மணிகண்டன்
முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடங்களை பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட
மாணவர்கள் பிரிவில், திருப்பூர் வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன்
காளீஸ்வரன் முதலிடம்; நஞ்சப்பா பள்ளி மாணவன் தனசேகர் இரண்டாமிடம்; அதே
பள்ளியை சேர்ந்த சதீஸ்வரன் மூன்றாமிடம். மாணவியருக்கான போட்டிகள்: 13
வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தாராபுரம் செயின்ட் அலோசியஸ் மெட்ரிக் பள்ளி
மாணவி கீதாஞ்சலி முதலிடம்; பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு
மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யா இரண்டாமிடம்; திருப்பூர் மைக்ரோ கிட்ஸ் பள்ளி
மாணவி சத்யா மூன்றாமிடம். 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு போட்டியில்,
முதலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மெர்லின் முதலிடம்; பிரண்ட்லைன்
மெட்ரிக் பள்ளி மாணவி பிரியங்கா; அதே பள்ளியை சேர்ந்த பிரியா இரண்டு,
மூன்றாம் இடங்களை தட்டிச்சென்றனர்.17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மைக்ரோ
கிட்ஸ் பள்ளி மாணவி திவ்யா முதலிடம்; ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி மாணவி
சுபஸ்ரீ இரண்டாமிடம்; செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி மாணவி பிரீத்திகா
மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, திருப்பூர்
ரூரல் எஸ்.ஐ., முனிராஜ் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட
விளையாட்டு அலுவலர் வெங்கட்ராமன், மாவட்ட மல்யுத்த கழக தலைவர் மோகன்ராஜ்
உட்பட பலர் பங்கேற்றனர்.