மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்ல தடை
மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்ல தடை
மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்ல தடை
ADDED : ஆக 31, 2011 11:55 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், மூன்றாவது நாளாக நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது.
பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து வீசும் பலத்த காற்றால், ராமேஸ்வரம் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், மூன்றாவது நாளாக நேற்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி கடல்பகுதியில் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை தான் படகுகள் கடலுக்கு செல்லும் நாள் என்பதால் ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரும்பாலான மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால், கடற்கரையில் மீன் கம்பெனிகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.