"அட்டாக்' பாண்டி மீது "குண்டாஸ்' பாய்ந்தது
"அட்டாக்' பாண்டி மீது "குண்டாஸ்' பாய்ந்தது
"அட்டாக்' பாண்டி மீது "குண்டாஸ்' பாய்ந்தது
ADDED : ஜூலை 28, 2011 06:00 PM
மதுரை: மதுரை தி.மு.க., முன்னாள் வேளாண் விற்பனைக்குழு தலைவர், 'அட்டாக்' பாண்டி மீது, குண்டர் தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.
மதுரை தெற்கு வெளிவீதியைச் சேர்ந்த எல்.ஐ.சி., அதிகாரி பிருத்விராஜ். இவரது வீட்டை அபகரிக்க முயன்றதாக, அட்டாக் பாண்டியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சொக்கிகுளத்தைச் சேர்ந்த கல்பனா. இவரது வீட்டை அபகரிக்க முயன்றதாக, அட்டாக் பாண்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை ஜவுளி வியாபாரி ஜெகதீசன். இவர், மதுரை கே.கே.,நகரைச் சேர்ந்த பூ வியாபாரி ஷியாம்சுந்தரிடம், 2009ல், பல லட்ச ரூபாய் கடன் வாங்கினார். அதற்காக, கே.கே.,நகரில் உள்ள தன் வீட்டு பத்திரத்தை ஷியாம்சுந்தரிடம் கொடுத்தார். அந்த வீட்டை, 20 லட்ச ரூபாய்க்கு விலைக்கு விற்கும்படி, முதுகுளத்தூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல் சகோதரர் மற்றும் தூத்துக்குடி வேளாண் விற்பனைக்குழு உதவி பொறியாளர் சக்திவேல், அட்டாக் பாண்டி ஆகியோர் மிரட்டியதாக, மூவர் மீதும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சக்திவேல், அட்டாக் பாண்டி கைதாகினர். இவ்வழக்குகளில் அட்டாக் பாண்டி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெகதீசன் வழக்கில், அட்டாக் பாண்டியை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க, போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் பரிந்துரைத்தார். அதையேற்று, அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.


