ADDED : செப் 16, 2011 09:57 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே அற்புதகெபி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையம்-காரமடை ரோட்டில் சிவன்புரத்தில் சின்ன வேளாங்கண்ணி என்றழைக்கும் அற்புதகெபி ஆரோக்கிய அன்னை சர்ச் உள்ளது. இதன் தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் தேதி வரை பல்வேறு பாதிரியார்கள் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் வழங்கினர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், திருவிழா ஆடம்பர கூட்டு பாடற்பலியை நிறைவேற்றினார். மாலை 5.30 மணிக்கு பாதிரியார் ஜெகன் ஆண்டனி தலைமையில் திருப்பலியும்,தேர்பவனியும் நடந்தது. சர்ச்சிலிருந்து புறப்பட்ட தேர் மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ வரை ஊர்வலமாக சென்று மீண்டும் சர்ச்சை வந்தடைந்தது. இறுதியில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை பாதிரியார் அலெக்சிசு மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.