/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருமூர்த்தி அணையில் தண்ணீர் நிறுத்தம்திருமூர்த்தி அணையில் தண்ணீர் நிறுத்தம்
திருமூர்த்தி அணையில் தண்ணீர் நிறுத்தம்
திருமூர்த்தி அணையில் தண்ணீர் நிறுத்தம்
திருமூர்த்தி அணையில் தண்ணீர் நிறுத்தம்
ADDED : செப் 04, 2011 10:54 PM
உடுமலை : திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது, நிறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு கடந்த 2ம் தேதி அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில், தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாசனப்பகுதிகளுக்கு 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு, 57 நாட்களுக்கு, வினாடிக்கு 1,150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தளி வாய்க்கால் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட தினைக்குளம், செடிக்குளம், செங்குளம், நேரடி பாசனம், கரிசல் குளம், அம்மாபட்டிகுளம், பெரிய குளம், ஒட்டுக்குளம், வளையபாளையம் குளம் பாசனம் மூலம் 2,788 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, விவசாயிகள் சாகுபடி பணிகளுக்கு ஆயத்தமாகினர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 8.00 மணிக்கு நான்காம் மண்டல பாசனத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ''அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், பாசனத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அணை நிரம்பியதும், 6ம் தேதி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். 'பாசன சங்க தலைவர்கள், பகிர்மானக்குழு, திட்டக்குழு தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாக' அதிகாரிகள் தெரிவித்தனர். அணை நிலவரம்: நேற்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 60 அடியில், 54.59 அடியாக இருந்தது. அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக 644 கன அடி நீரும், பாலாற்றிலிருந்து 2 கன அடி நீர் என மொத்தம் 646 கன அடி நீர் வரத்து இருந்தது.