/உள்ளூர் செய்திகள்/தேனி/விளையாட்டு போட்டிகளில் கம்மவார் பள்ளி சாதனைவிளையாட்டு போட்டிகளில் கம்மவார் பள்ளி சாதனை
விளையாட்டு போட்டிகளில் கம்மவார் பள்ளி சாதனை
விளையாட்டு போட்டிகளில் கம்மவார் பள்ளி சாதனை
விளையாட்டு போட்டிகளில் கம்மவார் பள்ளி சாதனை
ADDED : செப் 15, 2011 10:04 PM
தேனி : பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான பல்வேறு குழு விளையாட்டு போட்டிகளில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.
பீச் வாலிபாலில் மாணவருக்கான ஜூனியர் பிரிவில் ஜெகதீஸ், கோபி ஆகியோர் முதலிடமும், மேஜை பந்தாட்டத்தில் சீனியர் பிரிவில் விக்னேஷ், நவீன் ஒற்றையர் இரட்டையர் ஆட்டத்தில் முதலிடத்தையும், சூப்பர் சீனியர் பிரிவில் மீனாட்சி சுந்தர், அஜய்குமார் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். செஸ் போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவில் அர்ஜூன்சிங் இரண்டாம் இடத்தையும், திரிபுரசுந்தரி முதலிடமும், சுருதி இரண்டாம் இடமும், சீனியர் பிரிவில் குணசேகரன், அச்சுதலட்சுமி இரண்டாமிடம், ஜூனியர் பிரிவில் எஸ்.கீர்த்தனா முதலிடமும் பெற்றனர். கேரம் விளையாட்டில் ஜூனியர் பிரிவில் கே.ஸ்ரீசிந்து, எம். தீபிகா ஆகியோர் ஒற்றையர், இரட்டையர் ஆட்டத்தில் முதலிடத்தையும், கே.சரவணக்குமார் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். வாலிபாலில் ஜூனியர் சீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளைகோல் பந்தாட்டத்தில் ஜூனியர் பிரிவில் மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், ஹேண்ட்பாலில் சீனியர் பிரிவில் மாணவிகள் முதலிடத்தையும், ஜூனியர் சூப்பர் சீனியர் இரண்டாமிடத்தையும் பெற்றனர். இறகுபந்தில் ஜூனியர் பிரிவில் ஒற்றையர் ஆட்டத்தில் வசந்த் இரண்டாம் இடத்தையும், எறி பந்தில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் மாணவியர் முதலிடத்தையும், டென்னிகாய்ட் சீனியர் பிரிவில் சௌமியா, ஒற்றையர் ஆட்டத்தில் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றனர். யோகா போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கே.நிவேதா முதலிடம் பெற்றார். இவர்களை பள்ளி தலைவர் கே.வி.ஆர்., கிருஷ்ணசாமி, செயலாளர் ராம்தாஸ், இணை செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் கண்ணன், முதல்வர் ஜாய்ஸ் பாராட்டினர்.