Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிறுத்தை கடித்து காளை மாடு பலி : வி.கே.புரத்தில் பரபரப்பு

சிறுத்தை கடித்து காளை மாடு பலி : வி.கே.புரத்தில் பரபரப்பு

சிறுத்தை கடித்து காளை மாடு பலி : வி.கே.புரத்தில் பரபரப்பு

சிறுத்தை கடித்து காளை மாடு பலி : வி.கே.புரத்தில் பரபரப்பு

ADDED : ஜூலை 26, 2011 01:33 AM


Google News

விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரத்தில் அனவன்குடியிருப்பில் சிறுத்தை கடித்து காளை மாடு இறந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விக்கிரமசிங்கபுரத்தில் உள்ளது அனவன்குடியிருப்பு கிராமம்.

மலையடிவாரத்தில் உள்ள இக்கிராமத்தில் காலனி தெருவை சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் தனது வீட்டின் அருகே தனக்கு சொந்தமான விவசாய வேலைக்கு பயன்படுத்தும் காளை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை இரை தேடி இரவு நேரத்தில் மாட்டுதொழுவம் அருகே வந்தது. பின்னர் அங்கு வந்த சிறுத்தை ஒரு மாட்டை கடித்து கொன்றது.



மாட்டை கொன்ற சிறுத்தை மாட்டு தொழுவத்தில் வைத்தே இறந்தபோன மாட்டின் பெரும்பாலான பகுதியை சாப்பிட்டு சென்றுள்ளது. நேற்று வழக்கம் போல் கல்யாணராமன் காலையில் மாட்டு தொழுவத்திற்கு சென்று பார்த்தபோது காளைமாடு ஒன்று இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறுத்தை கடித்து மாடு இறந்தது என்ற விஷயம் பரவியதால் ஊர்மக்கள் திரண்டு வந்து மாட்டை பார்த்து சென்றனர்.இச்சம்பவம் குறித்து அனவன்குடியிருப்பு கிராம வனக்குழு சேர்மன் பால்ராஜ் பாபநாசம் சூழல் மேம்பாட்டு திட்ட அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். சூழல் மேம்பாட்டு திட்ட வனவர் பார்வதி, பாபநாசம் வனச்சரகம் வனவர் சுப்பாராவ், அரசு கால்நடை டாக்டர் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுத்தை கடித்து இறந்த காளை மாட்டினை பார்வையிட்டனர்.பின்னர் காளை மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்ததில் சிறுத்தை கடித்துதான் மாடு இறந்தது என உறுதி செய்யப்பட்டது. வீட்டின் அருகேயுள்ள மாட்டு தொழுவத்திற்கு வந்து சிறுத்தை மாட்டை கடித்து கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us