Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அரசு தொழில்நுட்பத் தேர்வு

அரசு தொழில்நுட்பத் தேர்வு

அரசு தொழில்நுட்பத் தேர்வு

அரசு தொழில்நுட்பத் தேர்வு

ADDED : ஜூலை 30, 2011 03:20 AM


Google News
மதுரை: அரசு தொழில்நுட்பத் தேர்வு நவம்பரில் நடக்கிறது.

ஓவியம், இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம்,கைத்தறிநெசவு பாடங்களுக்கு ஆக. 1 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம். முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகம், 4, ஹக்கீம் அஜ்மல்கான் ரோடு, சின்னசொக்கிகுளம், மதுரை-625 002 ல் விண்ணப்பங்கள் கிடைக்கும். தபாலில் பெற 15 ரூபாய் தபால் தலை ஒட்டிய, சுய முகவரியிட்ட கவருடன்அனுப்ப வேண்டும். நடனம் கீழ்நிலை 57, மேல்நிலை 62, இந்திய இசை கூடுதல் செயல்முறை கீழ்நிலை 27, மேல்நிலை 37, ஏனைய பாடங்கள் கீழ் நிலை 37, மேல்நிலை 47 ரூபாய் கட்டணம் கருவூலத்தில் செலுத்த வேண்டும். கூடுதல் செயலாளர் (தொழில்நுட்பத் தேர்வு), அரசுத் தேர்வுகள் இயக்ககம், கல்லூரிச்சாலை, சென்னை- 600 006 க்கு அசல் கருவூல ரசீது, கல்விச்சான்றிதழ் நகல் ( சான்றொப்பத்துடன்), தொழில்நுட்ப கீழ்நிலை சான்றிதழ் நகல் (ஹேண்ட்லூம் வீவிங் அண்டு டான்சிங் மேல்நிலைக்கு விண்ணப்பிப்பவர்) ஆக.,25 க்குள் அனுப்ப வேண்டும். கல்வி சான்றிதழ் போட்டோ நகலில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிட வேண்டும். உறை மீது 'அரசு தொழில் நுட்பத் தேர்வு நவ.,2011' என குறிப்பிட வேண்டும். தேர்வு துவங்கும் நாள் பின் அறிவிக்கப்படும் என மண்டலத் துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us