Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கரிவலம்வந்தநல்லூர் பஞ்., கிராம சபை கூட்டம்

கரிவலம்வந்தநல்லூர் பஞ்., கிராம சபை கூட்டம்

கரிவலம்வந்தநல்லூர் பஞ்., கிராம சபை கூட்டம்

கரிவலம்வந்தநல்லூர் பஞ்., கிராம சபை கூட்டம்

ADDED : ஆக 01, 2011 01:53 AM


Google News
திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் பஞ்.,கிராம சபை கூட்டம் நடந்தது.கரிவலம்வந்தநல்லூர் பஞ்.,சில் கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு அதற்கு பதிலாக கடந்த 23ம் தேதி நடந்தது.

கூட்டத்திற்கு கரிவலம்வந்தநல்லூர் பஞ்., தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். யூனியன் பற்றாளரான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட துணை பிடிஓ கொண்டல்சாமி, பஞ்., துணைத் தலைவி சண்முகத்தாய் முன்னிலை வகித்தனர்.பஞ்., உதவியாளர் மாரிமுத்து அஜண்டா வாசித்தார். கூட்டத்தில், 2011-12ம் ஆண்டிற்கு மேற்கொள்ளப்படவுள்ள பணிகளின் பட்டியல் ஒப்புதல் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. சமூக தணிக்கை குழுவின் அறிக்கை வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் பட்டியல் ஒப்புதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பிரபாவதி, சரஸ்வதி சுய உதவிக்குழு தலைவி சாந்தி, மக்கள் நலப்பணியாளர் கோவிந்தராஜன், குருசாமி, மாடசாமி, குமார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us