நிலம் கையகப்படுத்துதல் மசோதா நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகம்
நிலம் கையகப்படுத்துதல் மசோதா நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகம்
நிலம் கையகப்படுத்துதல் மசோதா நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகம்
ADDED : ஆக 05, 2011 02:12 AM
புதுடில்லி: 'மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும், விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்படும், நிலம் கையகப்படுத்துதல் மசோதா, பார்லிமென்டின் நடப்பு கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்' என, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
லோக்சபாவில், அவர் கூறியதாவது: தற்போது இந்த மசோதா அரசின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.
மாநில முதல்வர்களையும் மசோதா தொடர்பாக தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். அரசியல் கட்சித் தலைவர்களிடமும் ஆலோசித்துள்ளேன். அதனால், பார்லிமென்டின் நடப்பு கூட்டத் தொடரிலேயே மசோதா கொண்டு வரப்படும். மசோதா நிறைவேறிய பின், அதை அமல்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆனால், முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் என, சில தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.