
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க, சோவியத் ரஷ்யாவுடன் செய்த ஒப்பந்தத்தை, 1988ல், அன்றைய பிரதமர் ராஜிவ், பார்லிமென்டில் அறிவித்தபோது, அதை எதிர்த்த ஒரே எம்.பி., என்ற வகையில், தமிழக முதல்வரின் நடவடிக்கையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
டவுட் தனபாலு: என்னங்க செய்றது...
தி.மு.க., தலைவர் கருணாநிதி: இந்தியாவில் யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கலாம். லட்சக்கணக்கான ஏழை மக்கள் இப்போது, தொடர்ந்து இருக்கும் உண்ணாவிரதத்தை நீக்குவதற்கு, இந்த உண்ணாவிரதங்கள் பயன்பட வேண்டும் என்பது தான் என் விருப்பம்.
டவுட் தனபாலு: அடக்கொடுமையே... இதுவரை, 15 வருஷத்துக்கும் மேல, ஐந்து முறை முதல்வராக இருந்தீங்களே... அது, ஏழை மக்கள் தொடர்ந்து இருக்கிற உண்ணாவிரதத்தைப் போக்கப் பயன்படலையா...?
தமிழக காங்., செய்திக்குறிப்பு: ராஜிவை படுகொலை செய்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேருக்கு, சுப்ரீம் கோர்ட் கொடுத்த தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக காங்கிரஸ் சேவாதளம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும்.
டவுட் தனபாலு: அடடே... பயங்கர சுறுசுறுப்பாகிட்டீங்க போலத் தெரியுதே... சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை அறிவிச்சு, 11 வருஷமாகிடுச்சு... இதுல எட்டு வருஷமா உங்க ஆட்சி தான் நடந்துட்டு இருக்குது... அப்பல்லாம் ஏன் தூக்கு தண்டனையை அவங்க நிறைவேற்றலை... அப்பல்லாம் ஏன் நீங்க அதை வலியுறுத்தி போராடலை...?