/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆண்டிபட்டி "லவாகறி' கத்தரிக்காய்க்கு மவுசுஆண்டிபட்டி "லவாகறி' கத்தரிக்காய்க்கு மவுசு
ஆண்டிபட்டி "லவாகறி' கத்தரிக்காய்க்கு மவுசு
ஆண்டிபட்டி "லவாகறி' கத்தரிக்காய்க்கு மவுசு
ஆண்டிபட்டி "லவாகறி' கத்தரிக்காய்க்கு மவுசு
ADDED : செப் 08, 2011 10:46 PM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் விளையும்,'லவாகறி' வைலட் நிற கத்தரிக்காய்க்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் மவுசு உள்ளது.
டி.அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, வெள்ளையத்தேவன்பட்டி, புதூர், மூணாண்டிபட்டி பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் காய்கறி சாகுபடி நடக்கிறது. இங்கு 200 ஏக்கரில் வைலட் நிற கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள் ளது. 'லவாகறி' என்று இப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இவ்வகை கத்தரி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. முகூர்த்த காலங்களில் அதிக அளவில் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேவைக்கு ஏற்ப சாகுபடி செய்துள்ளனர். தொடர் மழை பெய்தால் கத்தரியில் புழு, பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும். இந்த ஆண்டு மழை துவங்காததால் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. பச்சை நிற கத்தரிக்காயை விட, வைலட் நிற கத்தரிக்காய்களுக்கு பல ஊர்களிலும் கிராக்கி உள்ளது. 40 கிலோ மூடை 200 முதல் 300 ரூபாய் வரை விற்றது. தற்போது முகூர்த்த சீசன் என்பதால் மூடைக்கு 500 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. ஆண்டிபட்டி மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்கிறது.