/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/சுவாமி சிலைகளை உடைத்து கால்வாயில் வீச்சு சமூக விரோதிகள் அட்டகாசம்சுவாமி சிலைகளை உடைத்து கால்வாயில் வீச்சு சமூக விரோதிகள் அட்டகாசம்
சுவாமி சிலைகளை உடைத்து கால்வாயில் வீச்சு சமூக விரோதிகள் அட்டகாசம்
சுவாமி சிலைகளை உடைத்து கால்வாயில் வீச்சு சமூக விரோதிகள் அட்டகாசம்
சுவாமி சிலைகளை உடைத்து கால்வாயில் வீச்சு சமூக விரோதிகள் அட்டகாசம்
பூதப்பாண்டி : அழகியபாண்டியபுரம் சுற்றுவட்டார பகுதியில் மூன்று கோயில்களில் சமூகவிரோதிகள் புகுந்து சுவாமி சிலைகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பூதப்பாண்டி போலீசார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, எஸ்.பி., அருண், டி.எஸ்.பி., பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கோயில் சிலைகளை சேதப்படுத்திய சமூகவிரோதிகள் குடிபோதையில் இந்த செயலை மேற்கொண்டனரா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைவில் பிடிக்குமாறு மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.சுவாமி சிலைகள் உடைப்பு சம்பங்களால் அழகியபாண்டியபுரம் சுற்றவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.