/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஊராட்சியில் நிதி முறைகேடை தவிர்க்க முன்தேதி காசோலையை நிறுத்த உத்தரவுஊராட்சியில் நிதி முறைகேடை தவிர்க்க முன்தேதி காசோலையை நிறுத்த உத்தரவு
ஊராட்சியில் நிதி முறைகேடை தவிர்க்க முன்தேதி காசோலையை நிறுத்த உத்தரவு
ஊராட்சியில் நிதி முறைகேடை தவிர்க்க முன்தேதி காசோலையை நிறுத்த உத்தரவு
ஊராட்சியில் நிதி முறைகேடை தவிர்க்க முன்தேதி காசோலையை நிறுத்த உத்தரவு
ADDED : செப் 30, 2011 11:05 PM
சிவகாசி : ஊராட்சி நிதி முறைகேடுகளை தவிர்க்க, முன்தேதியிட்ட வங்கி காசோலைகளை நிறுத்தி வைக்க, வங்கிகளுக்கு ஒன்றிய நிர்வாகம் மூலம் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஊராட்சி தலைவர்கள் பயன்படுத்திய வங்கி பாஸ் புத்தகம், காசோலை புத்தகங்களை ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்க, ஊராட்சி எழுத்தர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அனைத்தும் அந்தந்த ஒன்றிய ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சில ஊராட்சி தலைவர்கள், முன்தேதியிட்ட காசோலைகள் மூலம் பணம் எடுக்க முயற்சிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதனால், அனைத்து ஊராட்சி ஒன்றியத்திற்கும், மாவட்ட நிர்வாகம் மூலம் அவசர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில்,'முன்தேதியிட்டு வழங்கப்பட்ட ஊராட்சி காசோலையை நிறுத்தி வைத்து, ஊராட்சி கணக்குகள் வைத்துள்ள அனைத்து வங்கிகளுக்கும், ஒன்றிய நிர்வாகத்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்,' கூறப்பட்டுள்ளது. ஊராட்சி நிதி மோசடியை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவால், முன்தேதியிட்டு காசோலை வழங்கிய ஊராட்சி தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.