Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூர் மாவட்டத்தில் 1,273 பேர் மனு தாக்கல்

அரியலூர் மாவட்டத்தில் 1,273 பேர் மனு தாக்கல்

அரியலூர் மாவட்டத்தில் 1,273 பேர் மனு தாக்கல்

அரியலூர் மாவட்டத்தில் 1,273 பேர் மனு தாக்கல்

ADDED : செப் 27, 2011 12:09 AM


Google News

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்காக, அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர் மற்றும் உடையார்பாளயைம் பகுதிகளில் நேற்று, 1,273 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் அரியலூர் மாவட்ட பஞ்சாயத்து வார்டு எண் 5ல் போட்டியிடுவதற்காக, செந்துறை பஞ்சாயத்து யூனியனில், மாவட்ட பஞ்சாயத்து வார்டுக்கான தேர்தல் அதிகாரி சலாவுதீனிடம், தற்போதய பாளையக்குடி பஞ்சாயத்து தலைவி சிவமாலை முத்தமிழ் வீரன், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க., செந்துறை ஒன்றிய செயலாளர் ஜமால் முகமது, முன்னாள் ஒன்றிய செயலாளர் கொளஞ்சிநாதன், முன்னாள் பஞ்.,யூனியன் சேர்மன் சந்திரகாசன், ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். செந்துறை பஞ்.,யூனியன் ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 1. சன்னாசிநல்லூரில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுவதற்காக, அம்பிகா சந்திரகாசன் நேற்று தேர்தல் அதிகாரி முத்துசாமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். செந்துறை, திருமானூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட பல்வேறு ஒன்றிய கவுன்சில் வார்டுகளிலும் போட்டியிடுவதற்காக, ஏராளமான அ.தி.மு.க., வினர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



அரியலூர் பஞ்சாயத்து யூனியன் 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்காக, தே.மு.தி.க., சார்பில் சரஸ்வதி ஜெயவேல் நேற்று, தேர்தல் அதிகாரி முத்துவடிவேலிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அரியலூர் ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்டுக்கு ருக்குமணி காசிநாதன், அரியலூர் நகராட்சி 10 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சிவா, 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அகிலா உள்ளிட்டோர், தே.மு.தி.க., சார்பில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

உடையார்பாளையம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் ஞான பொன்மணி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாணிக்கம், சுயேச்சை வேட்பாளராக வெண்ணிலா உள்ளிட்டோரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, நேற்றைய தினம் நகராட்சி தலைவர் பதவிக்கு 3 பேர், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 17 பேர், டவுன் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு 5 பேர், டவுன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கு 30 பேர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 7 பேர், பஞ்.,யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 80 பேர், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 209 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 922 பேர் உள்பட 1,273 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us