ADDED : ஆக 11, 2011 10:57 PM
ஊட்டி : ஊட்டியை சேர்ந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஊட்டி பாபுஷா லைன் பகுதியை சேர்ந்தவர் ஆந்தோணி ராஜ்குமார்(21).
இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் தனது உறவுகார பெண்ணுடன் எங்கோ சென்று விட்டார். இந்நிலையில், பெண்ணின் தந்தை ஜெயராஜ், ஊட்டி பி1 காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், அந்தோணி ராஜ்குமார் மீது பெண் கடத்தல் வழக்கு பதிவு செய்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.