பட்டம் வாடகைக்கு... பேராசிரியர்கள் மோசடி: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப கவர்னர் உத்தரவு
பட்டம் வாடகைக்கு... பேராசிரியர்கள் மோசடி: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப கவர்னர் உத்தரவு
பட்டம் வாடகைக்கு... பேராசிரியர்கள் மோசடி: கல்லுாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப கவர்னர் உத்தரவு
UPDATED : ஜூலை 29, 2024 03:36 AM
ADDED : ஜூலை 28, 2024 07:10 PM

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் கல்லூரிகளுக்கு அவசியம்
இதற்காக போலி நியமனங்கள் மூலம் தனியார் கல்லூரிகள் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்
போலி ஆவணங்களை வைத்து 353 பேராசிரியர்கள் 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவது கண்டுபிடிப்பு
ஒரே சமயத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றும் டாப் 5 பேராசிரியர்களின் பட்டியல் வெளியீடு
பேராசிரியர்கள் மாரிச்சாமி, முரளிபாபு ஆகியோர் தலா 11 கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர்
அரங்கநாதன், வெங்கடேசன், வசந்தா சுவாமிநாதன் ஆகிய பேராசிரியர்களுக்கு தலா 10 கல்லூரிகளில் வேலை
மொத்தம் 2000 ஆசிரியர் பணியிடங்களை வெறும் 189 பேர் ஆக்கிரமித்துள்ளனர்
மோசடியில் ஈடுபட்ட கல்லுாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
கவர்னர் உத்தரவு
அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் போலி ஆவணங்கள் மூலம் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார்; மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க கவர்னர் ரவி உத்தரவு