இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சந்தேகமா? நேரலையில் விளக்கம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சந்தேகமா? நேரலையில் விளக்கம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சந்தேகமா? நேரலையில் விளக்கம்
ADDED : ஜூலை 28, 2024 06:29 PM

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு தினமலர் இணையதளத்தில் நாளை (ஜூலை 29) நேரலையில் விளக்கம் பெறலாம்.
அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங்கில் பொது பிரிவினருக்கான ஒதுக்கீடு நாளை (ஜூலை 29) துவங்குகிறது.
எப்படி நடக்கிறது தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்?
உங்கள் ரேங்கிற்கு எந்த கல்லூரி வாய்ப்பு?
TNEA கவுன்சிலிங் ல் புதிய மாற்றங்கள் இருக்கிறதா?
இந்த வருடம் கட் ஆப் குறையுமா?
எந்தப் பாடப்பிரிவிற்கு எதிர்காலத்தில் அதிக வாய்ப்புகள்? என்பன உள்ளிட்ட TNEA இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும், தினமலர் இணையதளத்தில் நேரலையில் நாளை காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை விளக்கம் அளிக்கப்படுகிறது.
‛வேலைவாய்ப்புகள் திறன்கள்' என்ற தலைப்பில் சென்னை இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க உள்ளார். தினமலர் சமூக வலைதள பக்கங்களான ‛பேஸ்புக், யூடியூப்' ஆகியவற்றிலும் நேரலை செய்யப்படுகிறது.
உங்கள் கேள்விகளை www.kalvimalar.com இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். நிபுணர்களின் ஆலோசனைகளை இலவசமாக பெறுங்கள்.