Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நிலஅபகரிப்பு புகார்களை விசாரிக்க போலீசார் பற்றாக்குறை

நிலஅபகரிப்பு புகார்களை விசாரிக்க போலீசார் பற்றாக்குறை

நிலஅபகரிப்பு புகார்களை விசாரிக்க போலீசார் பற்றாக்குறை

நிலஅபகரிப்பு புகார்களை விசாரிக்க போலீசார் பற்றாக்குறை

ADDED : ஆக 30, 2011 01:55 AM


Google News

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு பிரிவில் தொடர்ந்து மனுக்கள் குவிந்து வருவதால், போதிய போலீசார் இல்லாமல் விசாரணையில் தாமதமாகி வருகிறது.

கடந்த ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்கு அரசு அனைத்து மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களிலும் தனிப்பிரிவை துவக்கியது. இதில், ஒரு டி.எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., நான்கு ஏட்டுக்கள் என ஏழு பேர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. தனிப்பிரிவு துவக்கப்பட்டும், இதற்கான ஒதுக்கப்பட்ட போலீசார் வந்து பொறுப்பேற்கவில்லை. இதனால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரே தொடர்ந்து நில அபகரிப்பு புகார்களை விசாரித்து வருகின்றனர். போலீசார் பற்றாக்குறையால் விசாரணை தாமதமாகிவருகிறது.இதுவரை 470 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 12 புகார்கள் மீது மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 1950 ல் வாங்கிய நிலப்பிரச்னைகளை கூட இப்போது புகார்களாக தருவதால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகங்களில் விசாரித்த பின்புதான் வழக்கு பதிவுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குற்றப்பிரிவு அலுவலகத்தில் தினமும் திருவிழா கூட்டம் போல் புகார் அளித்தவர்களும், விசாரணைக்கு வருவபர்களுக்கு திரள்கின்றனர். இதனால் இட நெருக்கடியால் திணறியது. இதையடுத்து நில அபகரிப்பு பிரிவு, மாவட்ட போலீஸ் அலுவலக மேல்மாடி கூட்ட அரங்கிற்கு மாற்ற டி.ஐ.ஜி., சஞ்சய் மாத்தூர், உத்தரவிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us