/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/முந்திரி மரங்களில் "அண்டிமா' தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரைமுந்திரி மரங்களில் "அண்டிமா' தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
முந்திரி மரங்களில் "அண்டிமா' தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
முந்திரி மரங்களில் "அண்டிமா' தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
முந்திரி மரங்களில் "அண்டிமா' தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஆக 30, 2011 12:04 AM
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் முந்திரி மரங்களில் பரவி வரும் 'அண்டிமா' எனப்படும் தண்டு மற்றும் வேர்த் துளைப்பாளின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜன் ரவிச்சந்திரன் கூறும் போது, ''மாவட்டத்தில் 5 ஆயிரம் எக்டேர் பரப்பில் பரவலாக முந்திரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பயிரில் தேயிலை கொசு, தண்டு மற்றும் வேர் துளைப்பான், இலை குடையும் புழு, நுனி மற்றும் பூங்கொத்து புழு, தளிர் மற்றும் பூ பிணைக்கும் புழு உட்பட பல்வேறு பூச்சிகள் தாக்குகின்றன. மாவட்டத்தில் தற்போது முந்திரி பயிர்களில் தண்டு மற்றும் வேர்த் துளைப்பான் எனப்படும் பூச்சியின் தாக்குதல் அதகிமாக காணப்படுகின்றன. இதனால் முந்திரி மரங்களின் மரக் கிளைகள் மஞ்சள் பழுப்பு நிறமாக மாறி இலைகள் மற்றும் கிளைகள் காய்ந்து ஒவ்வொன்றாக கீழே விழுவதுடன் மரம் பட்டு விடும் வாய்ப்புகள் உள்ளது' என்றார். இப்பூச்சியின் தாக்குதலை தடுக்க பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேலநீலிதநல்லூர் தோட்டக் கலை உதவி இயக்குனர் ராஜா முகம்மது கூறியதாவது: முந்திரியை தாக்கும் பூச்சிகளில் தண்டு மற்றும் வேர்த் துளைப்பானை மரம் கொல்லி பூச்சியாகும். இந்நோயை கட்டுப்படுத்தாவிட்டால் மரம் நாளடைவில் அழிந்து விழும். ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் குறிப்பாக மே முதல் செப்டம்பர் வரை அதிக அளவில் காணப்படும். இப்பூச்சி தாக்குதலில் இரந்து பாதுகாக்க முந்திரி தோப்பை நன்கு பராமரித்து சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மரத்தையும் சுற்றியுள்ள சருகுகள், புற்களை அடிக்கடி அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற வேண்டும். தாக்குதல் தென்பட்டவுடன் வேர்கள் மற்றும் தண்டுகளில் உள்ள புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு ஒரு பங்கு தார் மற்றும் 2 பங்கு மண்ணெண்ணெய் கலந்து பூச வேண்டும். மரத்தை சுற்றி கார்பரில் 0.2 சதவீத மருந்தை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். வேரை நுனியில் சீவி விட்டு பின் மானோகுரோட்டோபாஸ் 20 மி.லி மருந்தை 20 மி.லி தண்ணீருடன் சிறிய அளவுள்ள பாலித்தீன் பைகளில் கலந்த சீவப்பட்ட வேரை மருந்து கலவையில் மூழ்குமாறு செய்து இறுகி கட்ட வேண்டும். ஐந்து முதல் 7 செ.மீ நீள அகலத்திற்கு முந்திரி பட்டையை எடுத்து பின்பு மானோகுரோட்டோபாஸ் 10 மி.லி மருந்தை பஞ்சில் நனைத்து பட்டை எடுக்கப்பட்ட பகுதியில் வைத்து ஏற்கனவே தனியாக எடுக்கப்பட்ட பட்டையை வைத்து களி மண்ணால் அடைத்து விட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.