/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போக்குவரத்துக்கு இடையூறாக போலீஸ் வாகனம்: மக்கள் அதிருப்திபோக்குவரத்துக்கு இடையூறாக போலீஸ் வாகனம்: மக்கள் அதிருப்தி
போக்குவரத்துக்கு இடையூறாக போலீஸ் வாகனம்: மக்கள் அதிருப்தி
போக்குவரத்துக்கு இடையூறாக போலீஸ் வாகனம்: மக்கள் அதிருப்தி
போக்குவரத்துக்கு இடையூறாக போலீஸ் வாகனம்: மக்கள் அதிருப்தி
ஓசூர்: ஓசூர் டவுனில் போலீஸார் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது.
இப்பகுதியில் நடைபாதை கடைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் காணப்படுகிறது. அதனால், வாகன போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பித்து வருகிறது. நகர சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துக்கும் முக்கிய சிக்னல் பாயின்டுகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அடிக்க பணி நேரத்தில் மாயமாகி விடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட ஒட்டு மொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்து விடுகிறது. போக்குவரத்து போலீஸார் இவற்றை கண்டுகொள்ளாமல் அருகில் டீக்கடைகள், கடைகளில் அமர்ந்து கொண்டு, ஆட்டோ டிரைவர்கள், போலீஸ் நண்பர்களை வைத்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்துகின்றனர்.
வி.ஐ.பி., அரசியல் புள்ளிகள் வாகனங்கள், போலீஸார் ஆகியோர் தங்களுடைய வாகனங்களை நகர சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பார்க்கிங் செய்யப்படுகின்றனர். குறிப்பாக நேதாஜி சாலை, தாசில்தார் அலுவலக சாலை மற்றும் எம்.ஜி., சாலையில் போலீஸாரும், வி.ஐ.பி., க்களும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுவதால் வாகன ஓட்டிகளை அந்த வழியாக சாலைகளை கடந்து செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிமுறைகளை பாதுகாக்க வேண்டிய போலீஸாரே, வாகனங்களை தாறு மாறாக சாலைகளில் நிறுத்தி செல்வதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.