/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/திறந்த வெளி பட்டங்கள்: வேலை வாய்ப்பு தகுதிக்கு கோரிக்கைதிறந்த வெளி பட்டங்கள்: வேலை வாய்ப்பு தகுதிக்கு கோரிக்கை
திறந்த வெளி பட்டங்கள்: வேலை வாய்ப்பு தகுதிக்கு கோரிக்கை
திறந்த வெளி பட்டங்கள்: வேலை வாய்ப்பு தகுதிக்கு கோரிக்கை
திறந்த வெளி பட்டங்கள்: வேலை வாய்ப்பு தகுதிக்கு கோரிக்கை
ஓசூர்: 'தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் திறந்த வெளி பல்கலைகழகங்களில் படித்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் செல்லும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும், ' திறந்தவெளி பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு அமைப்பு வலியுறுத்திள்ளனர்.
அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேரலாதன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: உயர் கல்வி வாய்ப்புகளை பெருக்கவும், கல்வி பரவலுக்கு உதவவும் கடந்த 2001 அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக கவர்னரின் ஒப்புதல் பெற்று தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
திறந்த வெளியில் பட்டம் பெற்றவர்கள் சமூக பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியவர்கள். திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பெறப்படும் பட்டம் அரசு வேலைவாய்ப்புகளில் தகுதியானது என நம்பி தான் படித்தனர்.
இதனால், திறந்த வெளி பல்லைக்கழகத்தில் பட்டம் பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திறந்த வெளி பல்கலைக்கழக பட்டதாரிகளை அரசு வேலைக்கு தகுதியில்லாதவர்கள் என புறக்கணிப்பது நியாயமில்லை. மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு எழுத திறந்த வெளி பல்கலைகழக பட்டதாரிகளுக்கு தடையில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் திறந்த வெளி பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி, பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. மேற்கு வங்காள மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் திறந்த வெளி பல்கலைக்கழக பட்டம் அரசு பணிகளுக்கு செல்லும் என அறிவித்துள்ளது. திறந்த வெளி பல்லைக்கழகத்தில் படித்த மாணவர்களுடைய பட்டம் அரசு வேலைவாய்ப்புகளில் செல்லும் என அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், திறந்த வெளி பல்லைக்கழகத்தில் பட்டம் பெற்ற 3 லட்சம் இளைஞர்கள் பலன் பெறுவார்கள்.