/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., எழுத்துத்தேர்வுநெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., எழுத்துத்தேர்வு
நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., எழுத்துத்தேர்வு
நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., எழுத்துத்தேர்வு
நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., எழுத்துத்தேர்வு
ADDED : ஆக 08, 2011 03:45 AM
திருநெல்வேலி : நெல்லையில் 5 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., எழுத்துத்தேர்வு நடந்தது.மாற்றுத்திறனாளிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் 859 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 41 பேர் கண் பார்வையற்றவர்கள்.பாளை. ஜான்ஸ் பள்ளி, கதீட்ரல் பள்ளி, எஸ்.டி.சி., பள்ளி, ரோஸ்மேரி பள்ளி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடந்தது. மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் அதிகாலையில் தேர்வு மையத்துக்கு வந்தனர். காலை முதல் மதியம் வரை தேர்வு நடந்தது. 800க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.முறைகேடுகள் நடக்காமல் அலுவலர்கள், பறக்கும் படை குழுவினர் கண்காணித்தனர். தேர்வு நடந்த இடங்களில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.


