ADDED : செப் 19, 2011 01:53 AM
சென்னை : வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற, இளம்பெண் மாயமானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அம்பத்தூர், ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், இவரின் மகள் கலையரசி,21. அம்பத்தூர் ஓ.டி., பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர், பின், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் மற்றும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மோகன்ராஜ் நேற்று அம்பத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற இளம்பெண் மாயமானது குறித்து விசாரிக்கின்றனர்.