போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்
போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்
போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்
ADDED : ஜூன் 13, 2024 05:03 PM

பெங்களூரு: 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிஐடி, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவருக்கு வயது 80. இவர் தம்மிடம் உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவம் நகர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் - சிஐடி விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே எடியூரப்பா மீது பலாத்கார புகார் கொடுத்த சிறுமியின் தாய் திடீரென இறந்தார். நுரையீரல் புற்று நோய் காரணமாக அந்த தாய் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எடியூரப்பாவை கைது செய்ய வேண்டும் என சிறுமியின் சகோதரர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்பட உள்ளார்.