Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிறுபான்மையினர் பண்டிகையில் இலவச வேட்டி, சேலை :ஐக்கிய ஜமாஅத் கோரிக்கை

சிறுபான்மையினர் பண்டிகையில் இலவச வேட்டி, சேலை :ஐக்கிய ஜமாஅத் கோரிக்கை

சிறுபான்மையினர் பண்டிகையில் இலவச வேட்டி, சேலை :ஐக்கிய ஜமாஅத் கோரிக்கை

சிறுபான்மையினர் பண்டிகையில் இலவச வேட்டி, சேலை :ஐக்கிய ஜமாஅத் கோரிக்கை

ADDED : ஆக 23, 2011 11:51 PM


Google News
விழுப்புரம் : சிறுபான்மையினர் பண்டிகை காலத்தில் அரசு இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டுமென முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவையினர் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேரவை அமைப்பாளர் அமீர்அப்பாஸ் கூறியதாவது: மத்திய அரசு வரும் 2013ம் கல்வியாண்டு முதல் இளம் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர் கல்வி கனவை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக ரமலான் பண்டிகை கொண்டாடுவதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண் டிகையின்போது அரசு இல வசமாக வேட்டி, சேலை, சிறார்களுக்கு உடைகளை வழங்க வேண்டும். நோன்பிற்கான அரிசி வழங்க உத்தரவிட்ட முதல்வர் ஜெ., வை பாராட்டுகிறோம். ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே உள்ளிட்டோருக்கு ஐக்கிய ஜமாத் ஆதரவு தெரிவிக்கிறது. அரசு வகுப்பு வாரியத் தலைவர்களை நியமிக்கும் போது உலமாக்கள் சபை சார்பில் பரிந்துரை செய்துள்ளவர்களை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அமீர்அப்பாஸ் தெரிவித்தார். செய லாளர் ஷேக்தாவூத், இளை ஞரணி தலைவர் முகமதுஹக்கீம், கவுரவ ஆலோசகர் சாகுல்அமீது, சகாயராஜ் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us