/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிசமூக அறிவியல் தினம் கொண்டாட்டம்கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிசமூக அறிவியல் தினம் கொண்டாட்டம்
கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிசமூக அறிவியல் தினம் கொண்டாட்டம்
கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிசமூக அறிவியல் தினம் கொண்டாட்டம்
கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிசமூக அறிவியல் தினம் கொண்டாட்டம்
ADDED : செப் 19, 2011 12:58 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில், ஓசோன் நாள் மற்றும் சமூக அறிவியல் தினம்
கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் பிரேம்தாஸ் தலைமை வகித்தார். ஆலோசகர் ராஜன் முன்னிலை
வகித்தார். சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் ராஜேந்திரன் பங்கேற்று,
கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். ஓசோன் படலம் பாதிக்கப்படுவதையும்,
அதை தடுப்பது குறித்த படக்காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.மேலும், அது
தொடர்பாக நடந்த நாடகம், நடனம், படங்கள் ஆகியவற்றில் மாணவ, மாணவியர்
ஆவர்முடன் பங்கேற்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்
குறித்து, விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் உறுதி
மொழி எடுத்துக்கொண்டனர்.மாணவர்கள், இதுபோன்ற விழிப்புணர்வு காரியங்களை,
தங்களது வாழ்க்கையில் கடைபிடிப்பதுடன், அதை சமுதாயத்துக்கும் கொண்டு செல்ல
வேண்டும் என, அறிவிறுத்தப்பட்டது. ஓசோன் தினத்தை முன்னிட்டு, மாசு
கட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்காகவும், மழை வளம் பெறவும், பள்ளி வளாகம்
முழுவதும், 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டது.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள்,
மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சகுந்தலா,
சந்திரமோகன், மலர்விழி ஆகியோர் செய்திருந்தனர்.