கரூரில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
கரூரில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
கரூரில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
ADDED : ஜூலை 19, 2011 05:54 PM
கரூர்: கரூரில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் நெரூர் மடபாக்கம் கிராமம் அருகேயுள்ள பெரியகசசிபாயைம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊர் கோவிலின் அருகே காலியிடம் இருந்தது. இந்த இடம் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு மைதானமாகவும், திருவிழாவின்போது நாடகம் போடவும், ஊர்ப்பொதுக்கூட்டங்கள் நடத்தவும் பயன்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த அளவெடுக்க வந்தனர். இதனையறிந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பினர். எதிர்காலத்தில் நிலத்தை கையகப்படுத்தாமல் இருக்க பொதுமக்கள் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். பின்னர் அவர்கள் மனு அளித்து விட்டு திரும்பினர். நிலத்தை கையகப்படுத்த முயன்றால் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


